LATEST NEWS
90 களில் மந்திரவாதி வேடத்தில் நடித்த நடிகர் இவர்தான்.. புகழின் உட்சத்தில் இருந்த இவரின் நிலைமை எப்படி ஆனது தெரியுமா …???
தமிழ் 90 ஸ் காலத்தில் பிரபலமாக ஓடிய படம் தான் ‘அம்மன்’ . அந்த படத்தில் மந்திரவாதியாகி நடித்தவர் தான் அந்த ராமி ரெட்டி. இவர் முதலில் தெலுகுவில் ‘அனுக்சம்’ என்னும் தனது முதல் படத்தை நடித்தார் . அந்த முதல் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதன் பின்னர் தான் இவர் தமிழில் நடித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, கன்னடா போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார். இவரது ரோல் பெரும்பாலும் சாமி படம் அல்லது பேய் படம். அதில் வில்லன் ரோல் தான் இவர் நடித்து இருப்பார் .
இவருக்கு அந்த வில்லன் ரோல்களில் இவர் பிரபலமாக கரணம் இவரின் அந்த இரண்டு முண்ட கண்கள் தான் . இவர் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஆனால் இவர் கையில் உள்ள பணத்தை வைத்து இவர் ஒரு தயாரிப்பாளராக வேண்டும் என்று எண்ணி தனது பணத்தை முழுவதும் படத்தில் போட்டு இவர் எடுத்து தயாரித்த படங்கள் அனைத்தும் இவருக்கு தோல்வியை தான் தந்தது . மேலும் இவர் தயாரித்த படங்களில் ஒன்றான சாய் பாபா படத்தில் இவர் சாய் பாபாவாகவும் நடித்தார்.
ஆனால் புகழிலிருந்த இவர் இயக்குனராக தோல்வியை சந்தித்து பண கஷ்டத்தில் இருந்தார் . அந்த கஷ்ட காலத்தில் இவருக்கு உடல் நிலையும் சரி இல்லாமல் போய் இவருக்கு லிவர் மற்றும் கிட்னி பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியில் இவர் கொடிய நோயால் இறந்தும் போய் விட்டார்.
