LATEST NEWS
18 வயதில் திருமணம்!! 20 வயதில் விவாகரத்து!!. .. தனி பெற்றோராக பிள்ளைகளை பாதுகாத்து வெற்றியடைந்த பிரபல குணச்சித்திர நடிகை சுலக்க்ஷனா…
80 ‘ஸ் கதாநாயகியான நடிகை சுலக்க்ஷனா வாழ்க்கையை பற்றி ஒரு சிறு முன்னோட்டம். நடிகை சுலக்க்ஷனாவின் நிஜ பெயர் ஸ்ரீதேவி. அவரது சொந்த ஊர் ஆந்திர அவரின் தாத்தா பத்திரிகையாளராக இருந்ததால் வேலை மாற்றான் ஏற்பட்டு அவர்கள் தமிழ்நாடு வந்தனர் . நடிகை சுலக்க்ஷனா தனது தாத்தாவுடன் நடிகர்களின் பேட்டியை காண வருவார் .அப்படி ஒருநாள் கே . பாலச்சந்திரன் அவர்கள் இயக்கி கொண்டு இருக்கும் படத்தில் குழந்தை நட்சத்திரம் தேடிவந்ததால் அந்த சமயம் இவர்கள் அங்கு பேட்டி எடுக்க சென்றதால் நடிகை சுலக்க்ஷனாவை பார்த்த பாலச்சந்தர் இப்படத்தில் நீ குழந்தையாக நடிக்கிறாயா என்று கேட்டதும் .
அவர்கள் ஒத்துக்கொண்டு தனது முதல் படமான காவிய தலைவன் படத்தில் தனது நடிப்பை ஆரமித்தார் . அந்த படத்தில் நடிகர் ஜெமினி கணேஷ் மற்றும் நடிகை சௌகார்ஜானகியின் குழந்தையாக நடிகை சுலக்க்ஷனா தனது முதல் படத்தை தன் 3 வயதில் ஆரமித்தார். பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து அவர் குழந்தை நட்சத்திரமாகவே 100 படங்கள் நடித்தார் . அதுவும் தமிழ் , மலையாளம் ,கன்னடம் என்று பிற மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக வளம் வந்தார். பிறகு கதாநாயகியாக அவருக்கு வாய்ப்பு கிடைத்து பிறமொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்தார்.
ஆனால் தமிழில் மட்டும் அவருக்கு கதா நாயகி வாய்ப்பு நிராகரிக்க பட்டது. ஆனால் நடிகர் பாக்யராஜின் மனைவி பிரவீணா அவர்கள் தான் நடிகை சுலக்க்ஷனாவிற்கு சிபாரிசு செய்து தமிழில் நடிகையாக சான்ஸ் வாங்கி கொடுத்தார் . அதனால் இவர் தமிழில் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவருக்கு 18 வயது ஆகும் பொழுது திருமணம் நடந்தது .இவரது கணவர் எம் . ஸ் . விஸ்வநாதன் அவர்களின் மகன் கோபிகிருஷ்ணன் ஆவர் . இவருக்கு திருமணம் முடிந்த பிறகு தான் தமிழ் திரை உலகில் நிறைய படங்கள் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது..
இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்பட்டு கணவனை பிரிந்து விவாகரத்து பெற்று கொண்டு வாழ்ந்து வந்தார் . பிறகு இவர் குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு வந்ததால் இவருக்கு சின்ன திரையில் நடிக்க வாய்ப்பு வந்ததும் அதற்கு ஒப்பு கொண்டு மீண்டும் நடிக்க ஆரமித்தார். இவர் விவாகரத்துக்கு பின் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தன் குழந்தைகளை நன்றாக படிக்கவைத்து அவர்களுக்கு நல்ல ஒரு வாழ்வை அமைத்து கொடுத்து விட்டார் தனி ஒரு பெற்றோராக இருந்து .
இதுவே இவரது வாழ்வில் ஒரு சாதனை நிகழ்வு . மேலும் இவர் ஒரு நல்ல நடிகை என்ற பாராட்டு சிந் பைரவி படத்தில் தான் இவருக்கு கிடைத்தது இயக்குனர் பாலச்சந்தரிடம் இருந்து.
