LATEST NEWS
வெயிலுடன் சேர்ந்து மழை பொழிய…. வானவில் தோன்ற…. தனது அன்பான கணவருடன்…. 41 பிறந்தநாள் கொண்டாடும் சினேகா….!!!!
புன்னகை அரசி என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சினேகா தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். 90’ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த இவரின் சிரிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 2009 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது இவருக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் காதல் திருமணத்தில் முடிந்தது. தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
குழந்தை பிறந்த காரணத்தினால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த சினேகா தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் விளம்பரங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா தான் எங்கு சென்றாலும் அங்கு தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தனது 41வது பிறந்தநாளை இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கொண்டாடியுள்ளார். மழை, வானவில் என்று கணவருடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
