“எனக்கு நடந்த மாதிரி எந்த பொண்ணுக்கும் இனி நடக்க கூடாது”….. காவல் நிலையத்தில் கதறிய நடிகை திவ்யா….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்கு நடந்த மாதிரி எந்த பொண்ணுக்கும் இனி நடக்க கூடாது”….. காவல் நிலையத்தில் கதறிய நடிகை திவ்யா….!!!!

Published

on

என் நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நடிகை திவ்யா கதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வந்தி எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்த வருபவர் நடிகை திவ்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா என்ற தொடரில் நடித்து வரும் அர்னவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே வீட்டில் இரண்டு வருடங்களாக வசித்து வந்துள்ளனர். பின்னர் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

சில தினங்களுக்கு முன்பு தனது கணவர் அர்னவ் கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், இதனால் எந்த நேரத்திலும் எனது கரு கலையலாம் என்று நடிகை திவ்யா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றின் மூலமாக தெரிவித்திருந்தார். பதிலுக்கு அர்னவ் மனைவி திவ்யா மீது தனது தரப்பு நான் நியாயங்களை கூறி புகார் அளித்து வருகிறார்.

இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகார் அளித்து வரும் நிலையில் அர்னவ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் நடிகை திவ்யா புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அர்னவை நேரில் ஆஜராக வலியுறுத்தியுள்ளன. மேலும் அதில் என்னை முஸ்லிம் மதத்திற்கு மாற வைத்து திருமணம் செய்து கர்ப்பமான பின்னர் என்னை அர்னவ் விட்டுவிட்டார். இதனை எஃப்ஐஆர்-ல் நான் குறிப்பிடவில்லை. அதற்காகத்தான் இங்கு வந்து பல்வேறு தகவல்களை இப்போது இணைக்க வலியுறுத்தியுள்ளேன்.

Advertisement

இது குறித்து அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளன. விரைவில் எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு நடந்துள்ளது போல் எந்த பெண்ணிற்கும் நடக்கக்கூடாது. எல்லோரும் நீ கணவனுக்கு ஏற்றார் போல் குடும்பத்தை நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படி அனைத்து பெண்களும் ஒத்துழைத்து சென்றால் யார்தான் குரல் கொடுப்பது? இதனால் தான் நான் எதிர்த்து போராடுகிறேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in