LATEST NEWS
அவர் என்னை ஏமாத்திட்டாரு….! வீடியோவில் கதறி அழுத திவ்யா…. கணவனால் நேர்ந்த கொடூரம்…. என்ன நடந்தது?….!!!!
தமிழ் சினிமாவில் வெள்ளி திரைக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு சின்ன திரையிலும் இருக்கிறார்கள். சின்ன திரையில் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்த சீரியல் கேளடி கண்மணி.
இந்த சீரியலில் நடித்த நடிகர்களான அர்ணவ் மற்றும் திவ்யா, சீரியல் போது நட்பாக பழகி பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஒரு முஸ்லிம் என்பதால் முதலில் முஸ்லிம் முறைப்படி திருமணம் அதன் பிறகு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை அறந்தாங்கியை சேர்ந்த அருணா நிஜப்பெயர் நைனா முகமத். அதேபோல கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை திவ்யா சென்னை புரசைவாக்கத்தில் தங்கி மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.
அதைத்தொடர்ந்து தற்போது செவ்வந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது தான் தங்களுக்கு திருமணம் நடைபெற்றது என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை திவ்யா திடீரென்று இன்று தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் ஒரு காணொளியை வெளியிட்டார்.
அதில் தன் காதல் கணவர் தன்னை அடித்து சித்திரவதை செய்வதாகவும், தங்கள் தொடர்பாக புகைப்படம் மற்றும் சான்றிதழ்களை வெளியிட்டதால் அவர் தன்னை தாக்கியதாகவும், தான் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள், நடிகை திவ்யா திருமணத்திற்கு பிறகு சீரழிக்கப்பட்டு விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அந்த வீடியோவில் அவர் தனது கரு கலையும் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
