15 நாள் நீதிமன்ற காவல்…..! சின்னத்திரை நடிகர் அர்னவை….. சிறையில் அடைக்க உத்தரவு…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

15 நாள் நீதிமன்ற காவல்…..! சின்னத்திரை நடிகர் அர்னவை….. சிறையில் அடைக்க உத்தரவு…!!!!

Published

on

சின்னத்திரை நடிகர் அர்னவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சின்னத்திரை நடிகர் அர்னவ்  தன்னுடைய மனைவி திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றசாட்டி வருகின்றனர்.

இதற்கு இடையில் கர்ப்பிணியான திவ்யா தனது கணவர் அர்னவ்  தன்னை தாக்கியதாக சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்த பெயரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்னவ்  மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை, உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பலமுறை நடிகர் அர்னவை  காவல் நிலையத்தில் ஆஜராகும் படி சமன் அனுப்பிய போதும், அவர் ஆஜராகவில்லை. மேலும் தனது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக மனு ஒன்றை அளித்து  இருந்தார்.

Advertisement

இருப்பினும் போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் படபிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் அர்னவை  கைது செய்து மாங்காடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பின்னர் .அம்பத்தூர் நீதிமன்றத்தில் இவர் ஆஜர் படுத்தப்பட்டார். வரும் 28ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in