LATEST NEWS
ஒரு தலையாக காதலித்த ரகுவரன்…..! ப்ரொபோஸ் செய்த போது ‘நோ’ சொன்ன அமலா….. வேதனை அடைந்த வில்லன்….!!!!
சினிமாவில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ரகுவரன். இவரின் தனிப்பட்ட குரலும் இவர் பேசும் வசனங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. 1980 களின் பிற்பகுதியில் தொடங்கி 1990களின் இறுதிவரை மிகவும் பிரபலமான இவருக்கு வில்லன் கதாபாத்திரம் மிகவும் அற்புதமாக பொருந்தியது என்று தான் கூற வேண்டும். வில்லன் மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
சம்சாரம் அது மின்சாரம், முகவரி, திருமலை, யாரடி நீ மோகினி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியிருப்பார். கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தனது தந்தையின் ஹோட்டல் வியாபாரத்திற்காக குடும்பத்துடன் கோயம்புத்தூருக்கு இடம்பெயர்ந்தனர். கோவை அரசு கல்லூரியில் வரலாறு இளங்கலை படிப்பில் சேர்ந்த இவர் நடிப்பு மீது கொண்ட ஆர்வமும் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு நாடக குழுவில் இணைந்து சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிய சென்னை கிங்ஸ் நாடக குழுவில் இணைந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
அவருடன் அந்த குழுவில் இருந்தவர் நடிகர் நாசர். சினிமாவில் வாய்ப்புகள் வர தொடங்க படிப்படியாக நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். 1996 ஆம் ஆண்டு ரோகினியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ரிஷிவரன் என்கின்ற ஒரு மகன் உள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.
2008 ஆம் ஆண்டு நீரழிவு நோய் காரணமாக ரகுவரன் உயிரிழந்தார். இவர் கூட்டுப் புழுக்கள் என்ற திரைப்படத்தில் நடித்த போது தன்னுடன் நடித்திருந்த அமலாவை ஒருதலையாக காதலித்தார். இந்த காதலை அவர் அமலாவிடம் நேரடியாக கூற அவர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்ததாக ஒரு பேட்டியில் கூட அவர் குறிப்பிட்டு இருந்தார். காதல் தோல்விக்கு பிறகு 1996 ஆம் ஆண்டு ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.
