42 வது பிறந்தநாள் கொண்டாட்டம்….! உங்கள பார்த்தா அப்படி தெரியவே இல்லை…..! உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்……!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

42 வது பிறந்தநாள் கொண்டாட்டம்….! உங்கள பார்த்தா அப்படி தெரியவே இல்லை…..! உருகி உருகி வர்ணிக்கும் ரசிகர்கள்……!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டம் முதல் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சினேகா. இவரின் சிரிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால் இவரை ரசிகர்கள் செல்லமாக புன்னகை அரசி என்று அழைப்பார்கள். 2009 ஆண்டு  அச்சமுண்டு அச்சமுண்டு  என்ற திரைப்படத்தில் நடித்த போது. இவருக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் திருமணத்தில் முடிய தற்போது இவர்களுக்கு  இரண்டு குழந்தைகள் உள்ளன.

குழந்தை பிறந்ததற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்த சினேகா தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் விளம்பரங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் மற்றும் தனது போட்டோ சூட் புகைப்படத்தையும் வெளியிடுவது வழக்கம் .

Advertisement

அந்த வகையில் தற்போது 42 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கும் சினேகா. சமீபத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்திலிருந்து கணவருடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது கோயிலில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு 42 வயசு என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று உருகி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in