LATEST NEWS
ஜேம்ஸ் பாண்ட் படம் போல….. பிகினியும் சிக்ஸ்பேக்கும் இருக்குமானு கேட்காதீங்க?….. நடிகர் கார்த்திக் ஓபன் டாக்….!!!
மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சர்தார் .இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா, ரெஜிஜா விஜயன், லைலா, முனிஸ்கான், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா, மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு இந்த திரைப்படத்தை வெளியிடுகின்றது பட குழுவினர்.இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்திக் பேசியதாவது .மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு பேங்கில் இருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக உள்ளது, நெஞ்சை அடைப்பது போல் உள்ளது, என்று தெரிவித்தார்.
வங்கியில் இருந்து ஒரு குறுஞ்செய்தி இந்த அளவுக்கு பயத்தை ஏற்படுத்த முடியுமா என்று அந்த படத்தை பார்த்த பிறகு தான் தெரிந்தது .இந்த படத்திற்காக லக்ஷ்மனை சந்திக்க வைத்தார். அப்போது இந்த படத்தில் ஒரு வரியை தெரிவித்திருந்தார், என்பதில் ஒரு உளவாளி குழுவை உருவாக்கினார்கள். உளவாளியாக நடிக்கச் சொல்லிக் கொடுத்தார்கள். பிறகு ஏன் கஷ்டப்பட வேண்டும் ஒரு நடிகரை மிலிட்டரிக்காரராக மாற்றிவிட்டால் என்ன? என்று யோசித்தார்கள் .
அப்படி ஒரு நாடக நடிகரை அழைத்து வந்து பயிற்சி கொடுத்து உளவாளியாக மாற்றி பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்கள், என்று கூறினார்.இதை கேட்டதும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த கதையை முழுதாக எழுதி விட்டு வாருங்கள் என்று கூறினேன். அவர் எழுதிவிட்டு வந்து இந்த கதாபாத்திரம் இரட்டை கதாபாத்திரம் ஆக மாறி உள்ளது ,என்று கூற மறுபடியும் இரட்டை வேடமா வேண்டாம் என்று கூறினேன். ஆனால் மித்திரன் கதை கேளுங்கள் இந்த கதைக்கு இரட்டை கதாபாத்திரம் தேவைப்படுகின்றது என்று கேட்டார்.
கதை கேட்டதும் தானாகவே உளவாளிக்கான பல பார்வைகள் வந்தது.என்னுடைய கேரியரில் இது மிக முக்கிய படம். மேலும் எத்தனை வேடங்கள் போட்டாலும் எதற்காக போடுகிறோம் என்பதில் தான் அந்த வேதத்திற்கான மரியாதை உள்ளது. என்று பல விஷயங்களை பேசி இருந்தார் .இவர் பேசியது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .அது மட்டும் இல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
