LATEST NEWS
“லைஃப்ல இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க”…. ரசிகர்களுக்கு விஜய் சொன்ன அட்வைஸ்…. அப்படி என்ன சொன்னார் தெரியுமா….????
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சரத்குமார், குஷ்பூ மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் மேடையில் பேசிய விஜய் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் விதமாக பேசினார்.
அதாவது, பிரச்சனை வரும், நமக்கு எதிர்ப்பு வந்தால் நாம் கரெக்டா போயிட்டு இருக்கணும் தான் அர்த்தம். தேவையான விமர்சனம் மற்றும் தேவையில்லாத எதிர்ப்பு ஆகியவை நம்மை ஓட வைக்கும். நான் முன்னேற வேண்டுமென்றால் கட்டாயம் ஒரு போட்டியாளர் இருக்க வேண்டும். ஆனால் அந்த போட்டியாடும் நீங்களாகவே இருக்க வேண்டும். உங்களோடு போட்டி போடுங்க, உங்களுக்கே போட்டியா இருங்க, அன்பு மட்டுமே இந்த உலகத்தை ஜெயிக்கும் ஆயுதம் என்று ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் கூறினார்.
