LATEST NEWS
திடீரென ஏற்பட்ட மைக் பிரச்சனை…. வேகமாக மேடைக்குச் சென்ற விஜய்…. பலரின் பாராட்டை குவிக்கும் வீடியோ இதோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்க இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சரத்குமார், குஷ்பூ மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் மேடையில் படம் பற்றி பல விஷயங்களை கூறினர். அப்போது விஜயுடன் ரஞ்சிதமே பாடலை பாடிய மானசி மேடையில் ஏறி பேசிக் கொண்டிருக்கும்போது அவரின் மைக்கு திடீரென வேலை செய்யாமல் போனது. அதனைக் கண்ட விஜய் உடனே வேகமாக கீழே இருந்து மேடைக்கு ஏறி சென்று வேறொரு மைக்கை அவருக்கு கொடுத்தார். விஜய் அப்படி செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
https://twitter.com/VarisuMovie0ffI/status/1606679974530121729
