ஒரு நாளைக்கு 150 சிகரெட் குடிப்பேன்…. அதனால் இப்போ என்ன ஆச்சு தெரியுமா?…. இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரு நாளைக்கு 150 சிகரெட் குடிப்பேன்…. அதனால் இப்போ என்ன ஆச்சு தெரியுமா?…. இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் முதலில் இயக்கிய திரைப்படமான பொல்லாதவன் திரைப்படம் நடப்பு நிலைக்கு மிக அருமையாக படம் பிடித்து காட்டியதற்கு மிகுந்த பாராட்டுகளை பெற்றது. அடுத்ததாக இவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுகளை பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட ஆறு தேசிய விருதுகள் கிடைத்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இப்படி பல புகழுக்குரிய இயக்குனர் வெற்றிமாறன் குறும்பட பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர்களுக்கு அறிவுரை வழங்கினார். இப்போது பேசிய அவர், இயக்குனர் என்ற அழுத்தத்தில் ஒரு நாளைக்கு 150 சிகரெட்கள் குடிப்பேன். காலேஜ் படிக்கும் போது ஒரு நாளைக்கு 70 சிகரெட் குடித்தேன். ஆனால் இயக்குனர் ஆன பிறகு அது அப்படியே இரண்டு மடங்காக அதிகரித்தது. இதனால் என்னால் படங்களில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. முன்பு இருந்தது போல தற்போது ஓடி ஓடி வேலை செய்ய முடியாமல் போனதால் சிகரெட் குடிப்பதை நான் நிறுத்தி விட்டேன் என வெற்றிமாறன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in