LATEST NEWS
அடடே பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் இந்த நடிகர் தானா?…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே….!!!
தமிழ் சினிமாவில் 60 மற்றும் 70களில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்த சிவாஜி கணேசன், எம்ஜிஆர் மற்றும் நாகேஷ் உள்ளிட்ட பல நடிகர்களை மக்கள் என்றும் மறவாமல் உள்ளனர். அப்படி நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் முத்துராமன். இவர் 1960 முதல் 70 வரை முன்னணி நடிகராக திகழ்ந்தவர். நடிகர் எஸ் வி சகஸ்ர நாமம் நடத்தி வந்த சேவா ஸ்டேட் நாடகங்களில் நடிக்க தொடங்கிய இவர் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.
அது மட்டுமல்லாமல் நவரச திலகம் என்றும் மக்களால் அழைக்கப்பட்டார். இப்படி பல புகழுக்குரிய இவர் சுலோச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் சினிமாவில் நவரச நாயகன் என்று அனைவராலும் அறியப்படும் கார்த்திக். இவரின் மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நுழைந்து படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இந்தச் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
