TRENDING
பிக்பாஸில் 50 லட்சத்தை அசால்டாக தட்டி தூக்கிய அசீம்…. அதை என்ன செய்யப் போகிறார் தெரியுமா?…. லீக்கான உண்மை….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற கிட்டத்தட்ட 100 நாட்களைக் கடந்து நேற்று நிறைவு பெற்ற இந்த நிகழ்ச்சியில் அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேரும் பைனல் லிஸ்டில் தேர்வு செய்யப்பட்டனர். பிறகு ஷிவின் வெளியேற்றப்பட்ட நிலையில் அசீம் மற்றும் விக்ரமன் இவர்களில் யாராவது ஒருவர் தான் வெற்றியாளர்கள் என்று ரசிகர்கள் உறுதி செய்தனர்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் கோப்பையை தட்டி தூக்கினார். அவருக்கு முதல் பரிசாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேமரா முன்பு பேசிய அசீம், நான் செய்த சிறு தவறுகளை மன்னித்து கோபத்தில் பேசிய வார்த்தைகளையும் மன்னித்து உரிமையாக கேட்கிறேன் என்னை வெற்றி பெற செய்யுங்கள். கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நான் உதவி செய்து வருகிறேன். அவர்களின் கல்வி செலவை ஏற்க வேண்டும் என்ற என்னுடைய கனவு நிறைவேறுவதற்கு தற்போது பணம் தேவைப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியில் நான் வெற்றி பெற்றால் 25 லட்சம் அவர்களுக்கு சென்றடையுமாறு உதவி செய்வேன், என்னிடம் பணம் இல்லாததால் என்னை ஜெயிக்க வைத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்,நான் விழமாட்டேன் விழுந்தாலும் திமிரிகளும் தமிழன் என்று உருக்கமாக அவர் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போதைய வெற்றி பெற்ற 50 லட்சம் ரூபாயை இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக செலவழிப்பார் என்று தெரிகிறது.
