VIDEOS
பிக்பாஸ் பின்னரும் தொடரும் சொந்தம்…. ஏடிகேவை வீட்டிற்கு அழைத்து மகேஸ்வரி செய்த செயல்…. வைரலாகும் வீடியோ….!!!
தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வருபவர் விஜே மகேஸ்வரி. இவர் முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி சப்போர்ட் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். திருமணமான காரணத்தினால் தனது கரியருக்கு சற்று பிரேக் விடுத்தார்.
கணவன் மற்றும் குழந்தைக்காக நேரத்தை செலவிட்டார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரையில் விவாகரத்து ஆகி பத்து வருடங்கள் ஆகிறது. தற்போது இவருக்கு மகன் ஒருவர் இருக்கிறார். இதனிடையே சமீபத்தில் இவர் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
ஆனால் இவரின் நடவடிக்கைகளில் அதீத மாற்றம் இருந்ததால் சில வாரங்களில் வெளியேறி விட்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ஏடிகே மற்றும் ராமுடன் இணைந்து வீட்டில் பிரியாணி செய்யும் வீடியோ காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதனைப் பார்த்து ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றாலும் உங்களின் நட்பு தொடர்கிறதா என கருத்துக்களை கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
https://youtu.be/iLSip6vwghI
