LATEST NEWS
செல்வராகவன் மனைவி தாத்தா பெயரில் சென்னையில் புதிய சாலை…. திறந்து வைத்த முதல்வர்…. வெளியான புகைப்படங்கள்…!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை ஔவை சண்முகம் சாலையின் ஒரு பகுதிக்கு விபி ராமன் சாலை என்று புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை இன்று திறந்து வைத்தார்.
முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விபி ராமன் லாயிட்ஸ் கார்னர் என்ற பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவரின் மீது அமைந்துள்ள அந்த சாலைக்கு தற்போது விபி ராமன் சாலை என்று புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சாலையின் பெயர் பலகையை காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மறைந்த விபிராமன் முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் மத்திய அரசின் சட்ட அலுவலராக நியமிக்கப்பட்டவர். அப்போது இருந்து தென்னிந்தியராகவும் அதன் பிறகு தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆகவும் இந்திய வழக்கறிஞர் கழகத்தின் முன்னணி உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அதே சமயம் சட்டக்கல்லூரியில் துணை பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த 1995 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த இவர் கட்சியின் சட்ட திட்டங்களை உருவாக்கியவர்.
கல்வி மட்டுமல்லாமல் கர்நாடக இசை, ஆங்கிலம், கிரிக்கெட் மற்றும் இலக்கியம் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தவர். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
அதில் அவரின் மூத்த மகன் வழக்கறிஞர் திரு பிஎஸ் ராமன், இரண்டாவது மகன் பிவி மோகன் ராமன், மூன்றாவது மகன் பி ஆர் ராமன். மேலும் அவரின் இரண்டாவது மகன் மோகன் ஒரு திரைப்பட நடிகராகவும் உள்ளார். ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இன்றும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகின்றார். அதேசமயம் இவரின் மகள் வித்தியுலோகவும் ஒரு நடிகை தான். நடிகர் வி பி ராமன் மூத்த மகள் திரு பி எஸ் ராமன் அவர்களின் மகள் தான் கீதாஞ்சலி. இவரை பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு.
இவர் நடிகர் மற்றும் இயக்குனரான செல்வராகவனை திருமணம் செய்து கொண்டுள்ளார். செல்வராகவன் ஏற்கனவே நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் இரண்டாவதாக கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கீதாஞ்சலி தனது குடும்பத்துடன் இன்று நடைபெற்ற சாலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
