VIDEOS
பிறந்தநாள் அதுவுமா இப்படியா நடக்கணும்?…. குக் வித் கோமாளி மணிமேகலை வெளியிட்ட வீடியோ…!!!
சன் மியூசிக் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளனியாக வளம் வந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் விஜே மணிமேகலை. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.பிரியா வீடு மற்றும் வெட்டி பேச்சு உள்ளிட்ட இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இதனிடையே மணிமேகலை தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஹுசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சிறிது நாட்களிலேயே அவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து விலகினார்.அது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் பிறகு நீண்ட நாட்கள் கழித்து விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது மணிமேகலை தனது கணவருடன் இணைந்து youtube சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து மணிமேகலை தனது சொந்த ஊரில் புதிதாக இடம் வாங்கி இருந்த நிலையில் அந்த வீட்டில் வீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் போட்ட புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மணிமேகலை தனது பிறந்தநாள் என கூறிவிட்டு பிறந்தநாள் அன்று கார் முன் சக்கரம் பஞ்சர் ஆகிவிட்டது நல்ல வருடமாக எனக்கு இது இருக்கும் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மணிமேகலை வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
