நகைச்சுவை நடிகர் செந்திலின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

நகைச்சுவை நடிகர் செந்திலின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகர் செந்தில். இவரின் இயற்பெயர் முனுசாமி சினிமாவிற்காக தன்பெயரை செந்தில் என்று மாற்றிக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

இவர் தந்தை ராமமூர்த்தி தாய் திருக்கம்மல். இவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.  தனது 12 வயதில் சொந்த ஊரை விட்டு வந்து ஒரு எண்ணெய்  ஆட்டும் நிலையத்தில் வேலை செய்தார். அதன் பிறகு ஒரு தனியார் மதுபான கடையிலும் பணிபுரிந்தார்.

Advertisement

இவர்  நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து தன்னுடைய நடைப்பு திறமையை வளர்த்துக் கொண்டார். இதுவே இவர் சினிமாவில் நுழைய பெரும் உதவியாக இருந்தது. 1979 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து இவர் 1980 ஆம் ஆண்டு வெளியான ‘இதிக்கரா பக்கி’  என்ற படத்தில்  சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .அதன் பிறகு 1983 ஆம் ஆண்டு வெளியான ‘மலையூர் மம்பட்டியான்’என்ற படம் இவரது திரைப்பட வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

Advertisement

அதன் பின்பு  தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். நடிகர் செந்தில் நகைச்சுவை நடிகரான நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களின் நகைச்சுவை காம்போவானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்து நடித்துள்ளனர்.  நடிகர் செந்தில் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ‘ராசாத்தி’ என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

Advertisement

இவர் தமிழில்  பாய்ஸ் ,விசில், ஜெயம் , எல்லைச்சாமி, தங்க மனசுக்காரன், சின்ன தம்பி ,என்றும் அன்புடன், சிந்து, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘திரவம்’ என்ற ஒரு வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,இந்தி போன்ற மொழி படங்களில்  நடித்துள்ளார்.

நடிகர் செந்தில் கலைச்செல்வி என்பவரை 1984 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in