LATEST NEWS
‘சைவம்’ பட நடிகை கல்யாணியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…வெளியான புகைப்படங்கள்…
இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சைவம்’ இப்படத்தில் நாசர், சாரா அர்ஜுன், பாஷா, துவரா தேசாய், கல்யாணி நடராஜன் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை கல்யாணி நடராஜன் இவரின் பூர்வீகம் தமிழ்நாடு ஆனால் சில தலைமுறைக்கு முன்னாடியே வட இந்தியாவில் செட்டில் ஆகிவிட்டனர்.
இவர் சரஸ்வதி வித்யாலயா செம்பூர் பள்ளி மற்றும் செயின்ட் ஆன்ஸ் உயர்நிலைப் பள்ளி பள்ளி படிப்பை முடித்தார்.இவர் G. Ruparel College of Arts, Science and Commerce கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். நடிகை கல்யாணி நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
இவர் நாடக குழுக்களுடன் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார். மேடை நாடகங்களில் இவரின் நடிப்பைப் பார்த்து ‘சேட்டை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தமிழில் பிசாசு, ஒரு நாள் இரவில், குற்றம் 23, முப்பரிமணம், குரு, துப்பாக்கி முனை, சர்க்கார், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை திரிஷாவுடன் இணைந்து ஜி ஆர் டி நகை விளம்பரத்திலும், ஓடோனில் விளம்பரம், அழகு சாதன பொருட்கள், துணிக்கடை போன்ற பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.
நடிகை கல்யாணி பாலகிருஷ்ணன் நடராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
