LATEST NEWS
முத்தழகு சீரியல் நடிகை சாந்தி குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.. வெளியான புகைப்படங்கள்…
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் இருந்து வரவேற்புகள் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாக்கி வெற்றிகரமாக முடிவடைந்த ‘மெட்டி ஒலி’ சீரியலில் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் டான்சர் சாந்தி.
1990 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் குரூப் டான்ஸராக சினிமாவில் அறிமுகமானார். பின்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் மூவாயிரம் பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார்.
இவர் 500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராகபணியாற்றியுள்ளார் . இவர் ரஜினி, விஜய், அஜித் என பல ஹீரோக்கள் படங்களில் நடனம் ஆடி இருக்கிறார்.நடன இயக்குனர் சாந்தி அரவிந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்தது விலகி தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமானவர் ரோஜா’ சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் இருந்து வரவேற்பை பெற்றார்.
இவர் முத்தழகு , சித்தி 2 போன்ற பல சிரியல்களில் நடித்துள்ளார். நடிகை சாந்தி 2022 ஆம் ஆண்டு விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று’ பிக் பாஸ்’. ‘பிக் பாஸ் சீசன் 6’ போட்டியாளராக பங்கு பெற்றார். இவர் சோசியல் மீடியாவின் ஆக்ட்டிவாக உள்ளவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
