LATEST NEWS
‘திரௌபதி’ பட நடிகை ஷீலா ராஜ்குமாரின் கணவரை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படங்கள்…
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஜீ தமிழில் சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘அழகிய தமிழ் மகள்’. இந்த சீரியலை சுனில் கவிதா பாரதி இயக்கியுள்ளார்.
இந்த சீரியலில் ஷீலா ராஜ்குமார், புவியரசன், சுபாலக்ஷ்மி, அஞ்சு அரவிந்த், சாக்சி சிவா, அஸ்வின் குமார், சதீஷ், கோபி, கன்னியா, பாரதி போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர். இந்த சீரியலில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஷீலா ராஜ்குமார்.
இவர் அரியலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தன் பள்ளிப்படிப்பை ஜெயங்கொண்டத்தில் உள்ள புனித பாத்திமா உறைவிடப் பள்ளியில் பயின்றார். இவர் பள்ளி படிக்கும் பொழுது நடனம் மற்றும் மாறுவேட போட்டியில் மிகவும் ஆர்வமாக கலந்து கொள்வார்.
இவர் திருச்சிராப்பள்ளியில்உள்ள கலைக்காவேரி கவின்கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை என இரண்டிலும் பரதநாட்டியம் பயின்றார். அதன் பிறகு சென்னையில் உள்ள குழுவுடன் இணைந்தார். அங்கு அவர் நாடகக் கலைகளை நிகழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து கலைஞர் டிவியின் ரியாலிட்டி ஷோ நாளைய இயக்குனருக்காக குறும்படங்களிலும் பணியாற்றினார்.இவர் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான ‘ஆறுவது சினம்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைலகில் அறிமுகமானார்.
இவர் தமிழில் அனுமதிக்க, மனுசங்கடா, அசுரவதம், கும்பலங்கி இரவுகள், நம்ம வீட்டு பிள்ளை திரௌபதி,மண்டேலா , ஜோதி, மாயாத்திரை, பிச்சைக்காரன் 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் லிவிங் என்ற வலை தொடரிலும் சாட்சி என்ற குறும்படத்திலும் நடித்துள்ளா.ர் நடிகை ஷீலா ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவர் தன் கணவருடன் எடுத்த சில புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
