வாட்டர் பார்க்கில் நேர்ந்த கொடூரம்… பெற்றோர்கள் கண்முன்னே 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாட்டர் பார்க்கில் நேர்ந்த கொடூரம்… பெற்றோர்கள் கண்முன்னே 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள நீர் பூங்கா ஒன்றில், குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் சிந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. தனியார் ஆசிரியரான கபில் என்பவர், தன் குடும்பத்தினருடன் அங்குச் சென்றிருந்தபோது, சிறுவன் சிந்து சிறிய தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் அவனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சிறுவனைத் தனியாக விட்டுவிட்டுப் பெரிய குளத்திற்குச் சென்றுவிட்டனர். இதனால், தன் குடும்பத்தினரைத் தேடிக்கொண்டு சிறிய தொட்டியை விட்டு வெளியே வந்த அச்சிறுவன், எதிர்பாராதவிதமாகப் பெரிய குளத்திற்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

இச்சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து, முசாபர்நகர் மாவட்ட நிர்வாகம் அங்குச் செயல்பட்டு வரும் நீர் பூங்காக்கள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கியது. இதில், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த பல நீர் பூங்காக்களுக்கு அதிகாரிகள் அதிரடியாகப் பூட்டுப் போட்டு சீல் வைத்துள்ளனர். இக்கோர விபத்து, பொது இடங்களில் குழந்தைகளைக் கண்காணிப்பதில் பெற்றோர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்ற விழிப்புணர்வையும், நீர் பூங்காக்களின் பாதுகாப்பு விதிமுறைகளையும் மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in