“ஜெயிலுக்குப் போனா என்ன பாஸ்… கெத்து முக்கியம்..” போலீஸிடம் மாட்டினாலும் கேமராவுக்கு சிரிச்சுகிட்டே போஸ் கொடுத்த கில்லாடி கைதிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஜெயிலுக்குப் போனா என்ன பாஸ்… கெத்து முக்கியம்..” போலீஸிடம் மாட்டினாலும் கேமராவுக்கு சிரிச்சுகிட்டே போஸ் கொடுத்த கில்லாடி கைதிகள்..!!

Published

on

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது, சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டனர். அனந்த்நாக்கில் உள்ள போண்டியால்காம் சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரிடமிருந்து 21 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அனந்த்நாக் காவல் நிலையத்தில் எக்சைஸ் சட்டப் பிரிவு 48(ஏ)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து அனந்த்நாக் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தகவல்களையும், கைது செய்யப்பட்ட இருவரின் புகைப்படத்தையும் வெளியிட்டது. வழக்கமாக கைது செய்யப்படும் குற்றவாளிகள் பயத்துடனும் கவலையுடனும் காணப்படும் சூழலில், புகைப்படத்தில் இருந்த இரு நபர்களும் கையில் வழக்கு விவரங்கள் அடங்கிய தாள்களைப் பிடித்தபடி, நேரடியாகக் கேமராவைப் பார்த்து புன்னகைத்தவாறு நின்றிருந்தனர். வழக்கத்திற்கு மாறான இந்தச் சிரித்த முகப் புகைப்படம் தான் இணையத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளானது.

Advertisement

இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பயனர்கள் பலவிதமான நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “சமீபத்தில் நான் பார்த்ததிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதர்கள் இவர்கள் தான்” என்றும், “சாராயம் மிகவும் வீரியமாக இருந்திருக்க வேண்டும் அல்லது ஏதோ தேர்தலில் வெற்றி பெற்றது போல சிரிக்கிறார்கள்” என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் பலர், “காவல்துறையிடம் சிக்காத ரகசிய மதுபானம் இன்னமும் எங்கோ ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்”, “இந்திய அளவில் பிரபலம் அடைந்து விட்டதால் தான் இப்படி சிரிக்கிறார்கள்” எனக் கிண்டலாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in