“அய்யயோ காப்பாத்துங்க” அலறியபடி வீதியில் ஓடிவந்த மாற்றாந்தாய்… டீசலை ஊற்றி எரித்த மகன்… என்ன காரணம்..? நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யயோ காப்பாத்துங்க” அலறியபடி வீதியில் ஓடிவந்த மாற்றாந்தாய்… டீசலை ஊற்றி எரித்த மகன்… என்ன காரணம்..? நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

Published

on

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் உள்ள ஹவுசிங் காலனியில், குடும்பப் பிரச்சினை காரணமாக மாற்றாந்தாய் மீது டீசல் ஊற்றி தீ வைக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 40 வயதான சுஷ்மா தேவி என்ற பெண், தன் உடலில் 70 சதவீத பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாற்றாந்தாய் சுஷ்மா தேவி வீட்டில் இருந்தபோது, அவருக்கும் மோக்ஷ் வர்மா என்ற இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த இளைஞர் சுஷ்மா தேவியின் மீது டீசலை ஊற்றி கொடூரமாக தீ வைத்துள்ளார். உடலில் தீப்பற்றியதால் ஏற்பட்ட கடுமையான வலியால் அலறியபடி அவர் வீட்டிற்கு வெளியே ஓடிவந்து உதவி கேட்க, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

முதலில் உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் நிலைமை மோசமடைந்ததால் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் இறந்து போனார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான மோக்ஷ் வர்மாவைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in