உடலை வில்லாக வளைத்து உடற்பயிற்சி செய்யும் இந்த பிரபல நடிகை யார் தெரியுமா?… இதோ பாருங்க… - Cinefeeds
Connect with us

CINEMA

உடலை வில்லாக வளைத்து உடற்பயிற்சி செய்யும் இந்த பிரபல நடிகை யார் தெரியுமா?… இதோ பாருங்க…

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி.  இவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2008ல் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி.

இவர் இதை தொடர்ந்து தமிழில் வெடி, அசல், பேட்ட என ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தினார். இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

2014இல் மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார் நடிகை சமீரா ரெட்டி. தனது  குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார் நடிகை சமீரா.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் தற்பொழுது தன் உடலை வில்லாக வளைத்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  இப்புகைப்படமானது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sameera Reddy (@reddysameera)