LATEST NEWS
தடுமாறிய நிலையில் கார் ஒட்டி சென்ற மறைந்த நடிகர் மாரிமுத்து… இறுதி திக் திக் நிமிடங்கள்… வெளியான CCTV காட்சிகள்…
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை தான் எதிர்நீச்சல் சீரியல். கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலில் வில்லனாக மிரட்டி வருபவர் தான் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து.
இவர் சீரியலில் நடிக்கும் கதாநாயகி மற்றும் கதாநாயகனை காட்டிலும் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். சீரியலில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கு முன்பு இவர் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தார்.
இந்த சீரியலில் அவர் தனது வில்லத்தனமான நடிப்பை எதார்த்தமாக காட்டி வந்தார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது சொந்த மாமன் மகளான பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
நேற்று காலை அவர் மாரடைப்பால் காலமானார். சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரிமுத்து மூச்சுத் திணறல் ஏற்படவே அங்கிருந்து கிளம்பி வெளியே வந்துள்ளார். தனது காரை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடல் சென்றும் உள்ளார். ஆனால் ஹாஸ்பிடல் சென்ற மறுகணமே அவரது மாரடைப்பின் காரணமாக அவரது உயிர் பிரிந்தது. தற்பொழுது நடிகர் மாரிமுத்து டப்பிங் ஸ்டுடியோவிலிருந்து வெளியே வந்தது முதல் அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பியது வரையிலான திக் திக் நிமிடங்கள் குறித்த சி சி டிவி வீடியோ இணையாயத்தில் வெளியாகியுள்ளது.. இதோ அந்த வீடியோ…