‘அந்த புன்னகைக்கு விலை மதிப்பே கிடையாது’… ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகர் செய்த செயல்… பாராட்டும் ரசிகர்கள்… - Cinefeeds
Connect with us

CINEMA

‘அந்த புன்னகைக்கு விலை மதிப்பே கிடையாது’… ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகர் செய்த செயல்… பாராட்டும் ரசிகர்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக 1995ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய்.

இதைத்தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், துள்ளி திரிந்த வானம், கண்ணால் பேசவா, முத்தம், இயற்கை, தவம், வேதா என்று எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2012ல் தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தல அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக வில்லனாக அவதாரம் எடுத்தார்.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாகோ போன்ற மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார் அருண் விஜய். தற்பொழுது இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது, ஷூட்டிங் ஸ்பாட்டில் சாதாரண ஒரு சிறுமியை கொஞ்சும் புகைப்படத்தை பதிவு செய்து,  ‘அந்த சிரிப்புக்கு விலை மதிப்பே கிடையாது’ என்று கூறியுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Arun Vijay (@arunvijayno1)