LATEST NEWS
பச்சை வயல்கள் சூழ, பூவாசம் மதி மயக்க, நடந்து முடிந்த அஷோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம்…! முதன்முறையாக இணையத்தில் வெளியான வீடியோ…!

‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வமும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
கீர்த்தி பாண்டியன் தும்பா மற்றும் அன்பிற்கினியால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.சமீபத்தில் இவர்களது திருமணமும் திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள இன்டெரியில் நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் சில பெண்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் சிலர் ‘இவ்வளவு அழகா இருக்க நீங்க ஒண்ணுமே இல்லாத கீர்த்தி பாண்டியனை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்?’ என்று விமர்சித்தும் வந்தனர். சமீபத்தில் இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் அசோக் செல்வன்.
சமீபத்தில் இவர்களின் wedding reception சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். தற்பொழுது இவர்களின் திருமண வீடியோ ஒன்று இணையத்தில் முதன்முறையாக வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கியும் வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram