LATEST NEWS
நடிகர் சங்க கட்டிடம்… நேரில் சென்று பார்வையிட்ட நடிகர் கார்த்தி… வெளியான புகைப்படங்கள்..!!

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக முதலில் விஜயகாந்த் பிறந்த நிலையில் அவரைத் தொடர்ந்து சரத்குமார் பல வருடங்களாக தலைவராக இருந்தார். பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் நடிகர் சங்கத்திற்கான இடத்தில் சங்கு கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி களமிறங்கிய நாசர் தலைமையிலான விசாலணையும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து ரஜினி மற்றும் கமல் செங்கல் எடுத்துக் கொடுக்க கோலாகலமாக நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் ஆண்டுகள் ஆனதே தவிர இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக வழக்கால் பணிகள் பாதிக்கப்பட்டன.
கடந்த வருடம் நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்குகள் எண்ணப்பட்டு மீண்டும் விஷால் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்கம் கட்டிடத்தை நடிகர் கார்த்தி மற்றும் நடிகை சோனியா போஸ் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.