LATEST NEWS
அடுத்தடுத்து தனது ஹோட்டல்களை மூடிய நடிகர் கருணாஸ்.. என்ன காரணம்?.. அவரே பகிர்ந்த தகவல்…!!

தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா திரைப்படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் கருணாஸ். அந்த திரைப்படத்தில் ஒடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி, சிம்புவின் குத்து மற்றும் அஜித் உடன் இணைந்து வில்லன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
அந்த திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் சிறந்த காமெடியனாக ஜொலித்தார். இப்படி காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த கருணாஸ் திண்டுக்கல் சாரதி மற்றும் அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கருணாஸ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் கருணாஸ் லொடுக்கு பாண்டி, ரத்ன விலாஸ் மற்றும் திண்டுக்கல் சாரதி என மூன்று ஹோட்டல்கள் வைத்திருந்ததாகவும் ஆனால் மூன்று ஹோட்டல்களும் தற்போது என்னிடம் இல்லை அதன் மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளதாக வருத்தத்துடன் கூறியுள்ளார்.
சமீபத்தில் மலேசியாவிற்கு சென்றபோது ஹோட்டல் தொடங்குவதற்கான இடங்களை பார்த்து விட்டு வந்தேன். ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன்பு அதில் பொறுமை என்பது மிகவும் முக்கியம். இந்த முறை அவருடைய மனைவியின் பொறுப்பில் தான் மலேசியாவில் ஹோட்டலை துவங்க இருக்கிறார். காரணம் ஹோட்டல் பிசினஸ் சரியாக அவருக்கு கை கொடுக்க வில்லையாம். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.