LATEST NEWS
பிரபல மலையாள நடிகையை சத்தம் இல்லாமல் திருமணம் முடித்த மாநகரம் திரைப்பட நடிகர் ஸ்ரீ?.. போட்டோவை பார்த்து குழம்பிய ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் ஸ்ரீ. இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன்பப்படி மற்றும் பில் டெம்போ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் இவருக்கென தனி ஒரு அடையாளத்தை தேடி தந்த திரைப்படம் மாநகரம்தான்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக கிடைக்காத நிலையில் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் சில நாட்களிலேயே வெளியேறிவிட்டார். இந்நிலையில் பிரபல மலையாள நடிகை சானியா ஐயப்பனுடன் சேர்ந்து இவர் திருமண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது உண்மைதானா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது ஒரு புதிய படத்திற்கான போட்டோ சூட் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைந்து இறுகப்பற்று என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். அந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள திருமண காட்சி தான் இந்த புகைப்படம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க