“ஏதோ கெட்டது நடக்கும் போல இருக்கு”.. இறப்பதற்கு முன்பு கலங்கியபடி பேசிய மாரிமுத்து.. கண்ணீர் வரவழைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

“ஏதோ கெட்டது நடக்கும் போல இருக்கு”.. இறப்பதற்கு முன்பு கலங்கியபடி பேசிய மாரிமுத்து.. கண்ணீர் வரவழைக்கும் வீடியோ..!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அஜித்துடன் வாலி திரைப்படம் தொடங்கி மாறி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் மாரிமுத்து குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். அதே சமயம் இவர் நடித்து முடித்துள்ள பல திரைப்படங்களும் அடுத்தடுத்து வழியாக உள்ளன.

குறிப்பாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைப் போலவே இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில் நேற்று டப்பிங் பணியின் போது மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் இறுதி சடங்கு இன்று அவரின் சொந்த ஊரில் நடைபெற உள்ளது.

Advertisement

இந்நிலையில் மாரிமுத்து இறப்பதற்கு முன்பு எதிர்நீச்சல் சீரியலில் ஒரு காட்சியில் தனக்கு அடிக்கடி மாரடைப்பு ஏற்படுவது போல நெஞ்சுவலி வருவதாகவும் ஏதோ ஒரு கெட்டது நடப்பது போல தனக்கு தோன்றுவதாக கூறிய ஒரு வீடியோவை ரமேஷ் பாலா இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in