CINEMA
“ஐ லவ் யூ செல்லம்” தளபதி 69-ல் இணைந்தது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மகிழ்ச்சி….!!

நடிகர் விஜய்யின் தளபதி 69′ படத்தில் நடிக்கும் ‘ கதாபாத்திரங்களை நேற்று மாலை 5 மணி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது. விஜய்யின் கடைசி படமாக உருவாகும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், தளபதி 69 படத்தில் விஜய் உடன் மற்றொரு பயணத்தை தொடங்குவது மிகவும் அற்புதமாக இருக்கிறது. என் மீது அன்பை பொழியும் மக்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.