CINEMA
விஜய் நடிக்கும் “தளபதி 69” படத்தின் கதை இதுதானாம்…. லீக்கான தகவல்…!!

சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் உலகம் முழுவதும் 450 கோடி வசூல் செய்துள்ளது. இருப்பினும் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு பிரச்னையின் காரணமாக காவல்துறையில் இருந்து வெளியேறும் விஜய், முக்கிய கேஸ் காரணமாக மீண்டும் போலீஸில் இணைந்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் வகையில் உள்ளதாம் கதை என்று கூறப்படுகிறது. குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸ் உடையும் பொழுது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.