நடிகர் ரோபோ சங்கரின் திருமண புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?… முதன்முறையாக இணையத்தில் வெளிவந்த புகைப்படங்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ரோபோ சங்கரின் திருமண புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?… முதன்முறையாக இணையத்தில் வெளிவந்த புகைப்படங்கள்..

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான ”கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகி,

தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

Advertisement

தற்பொழுது இவர் தனது உடல் எடையை குறைத்து, ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கிறதா? உடலில் ஏதாவது நோயா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.

ஆனால் அவர் கடினமான உடற்பயிற்சி செய்துதான் தனது உடல் எடையை இவ்வாறு குறைத்துள்ளார் என்பது பின்னர் அவரது மனைவி தெளிவுபடுத்தினார்.தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் ரோபோசங்கர் பிரியங்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களுக்கு தற்பொழுது இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் மூத்த பிள்ளையான இந்திரஜா சங்கர் தற்பொழுது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

 

Advertisement

இவர் பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதைத்தொடர்ந்தும் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் இவர்,

சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் ரோபோ ஷங்கரின் திருமண புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ”நடிகர் ரோபோ சங்கரா இது? ஆள் அடையாளமே தெரியலையே ”என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in