LATEST NEWS
பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..
தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ஆ.எஸ்.சிவாஜி. கமல் தயாரித்து நடித்து பெரும் வெற்றிபெற்ற அபூர்வசகோதரர்கள் திரைப்படத்தில் போலீசாக வரும் ஜனகராஜுடன் எப்போதும் உடன் வவரும் சக போலீஸ் அதிகாரியாக ஆர்.எஸ்.சிவாஜி நடித்திருப்பார்.
இந்த படத்தில் இவர் அடிக்கடி பேசிய ‘சார் நீங்க எங்கயோ போயீட்டீங்க சார்’ வசனம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் என்றால் கண்டிப்பாக இவருக்கு ஒரு சிறிய வேடம் இருக்கும். அந்த அளவுக்கு பல படங்களில் ஆர்.எஸ்.சிவாஜி நடித்துள்ளார்.
திறமையான நடிகராக கருதப்பட்ட இவர், ஒரு காட்சியில் நடித்தாலும் அசத்திவிடுவார். இவர் நடிகர் மற்றும் இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரர் ஆவார். 1981ம் வருடம் முதல் இவர் சினிமாவில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நடிப்பில் சிறந்த படமாக கருதப்பட்ட கார்கி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தற்பொழுது தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த ஆர்.எஸ். சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66 என்று கூறப்படுகிறது. இவரின் மறைவு செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.