திரைப்படங்களில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு தடை?.. நீதிமன்ற உத்தரவால் ரசிகர்கள் ஷாக்… நடந்தது என்ன..?? - cinefeeds
Connect with us

LATEST NEWS

திரைப்படங்களில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு தடை?.. நீதிமன்ற உத்தரவால் ரசிகர்கள் ஷாக்… நடந்தது என்ன..??

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இதனிடையே சிம்பு மீது தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இது தொடர்பாக வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்களின் நிறுவனம் தயாரிப்பதற்காக திட்டமிட்டு இருந்த கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் நடிப்பதாக நடிகர் சிம்பு ஒப்பந்தம் செய்ததாகவும் அந்த படத்தில் நடிப்பதற்காக அவர் முன்பணமாக நான்கரை கோடி ரூபாய் வாஙகடந்த 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு சிம்பு படப்பிடிவுக்கு வரவில்லை. அதனால் கொரோனா குமார் படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஒரு கோடி ரூபாய் காண உத்திரவாதத்தை செலுத்த நடிகர் சிம்புவுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Advertisement

மேலும் செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்திரவாதத்தை செலுத்தவில்லை என்றால் வேறு திரைப்படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement