நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சியில் ஒட்டுமொத்த திரையுலகம்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சியில் ஒட்டுமொத்த திரையுலகம்..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் ஆண்டனிக்கு மீரா என்ற 17 வயது மகள் ஒருவர் உள்ளார். அவர் பிளஸ் டூ படித்து வரும் நிலையில் விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாராவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்த முதல் கட்ட விசாரணையில் லாரா கடந்த சில நாட்களாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.