CINEMA
200 மணி நேரத்தை அதற்காக செலவிட்ட நடிகை ரம்யா பாண்டியன்.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களை கவர்ந்து நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வப்போது இணையத்தில் பகிர்வார் ரம்யா பாண்டியன். இதனால் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
அதனால் தனது ரசிகர்களை திருப்தி செய்வதற்காக அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருவார்.
இந்த நிலையில் ரம்யா பாண்டியன் ரிஷிகேசில் உள்ள ஆசிரமத்தில் 21 நாட்கள் யோகா பயிற்சி வகுப்பை முடித்து யோகா டீச்சர் ஆகும் தகுதியுடையவர் என்ற சான்றிதழை பெற்றுள்ளார்.
இதனால் இனி தான் நடிகை மட்டுமல்ல யோகா டீச்சர் என்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க