CINEMA
நயன்தாராவை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதிக்கும் த்ரிஷா… அதுவும் இந்த சூப்பர் ஸ்டார் நடிகருக்கு ஜோடியாகவா?.. சூப்பர் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் மற்றும் விஜய் என இவர் ஜோடி போட்டு நடிக்காத முன்னணி நடிகர்களை திரை உலகில் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அனைத்து நடிகர்களுடனும் உச்ச நடிகையாக சற்றும் இடைவெளி விடாமல் 24 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இறுதியாக த்ரிஷா நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவரை சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் தற்போது விஜயுடன் ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திலும் திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள திரைப்படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனைப் போலவே ரஜினியின் 171 வது திரைப்படத்திலும் திரிஷா நாயகியாக நடிப்பார் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தி படம் ஒன்றில் நடிப்பதற்கும் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் விஷ்ணுவர்தன் தயாரிக்க உள்ள இந்த படத்தில் திரிஷா இணைவார் என தகவல் வெளியாகி உள்ளது.