LATEST NEWS
என்னது விஜயகாந்த் ஹீரோவாக இந்த காமெடி நடிகர் தான் காரணமா?.. என்னப்பா சொல்றீங்க… பலரும் அறியாத தகவல்..!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். மதுரையை சேர்ந்த இவரின் பெயர் விஜயராஜா. அதன் பிறகு சினிமாவுக்காக விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார். இவர் ஒரு நாள் ரஜினியுடன் சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்தபோது அப்போது நீங்கள் கூட நடிக்கலாமே என்று ரஜினி கூறிய நிலையில் உடனே விஜயகாந்துக்கு சினிமா ஆசை வந்துள்ளது.
முதலில் அப்பாவின் ரைஸ் மில்லில் நடத்தி வந்த விஜயகாந்த் அதன் பிறகு நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டு சென்னைக்கு வந்து ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி சினிமா வாய்ப்புகளை தேடி உள்ளார். பல புகைப்படங்களை எடுத்து சினிமா நிறுவனங்களில் தனது போட்டோக்களை கொடுத்து வாய்ப்பு தேடி நிலையில் இதெல்லாம் ஒரு மூஞ்சா இதற்கெல்லாம் நடிக்கணும்னு ஆசையா என பலரும் கிண்டல் செய்தனர்.
பல அவமானங்களை சந்தித்த இவர் தூரத்தை இடி முழக்கம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் அடுத்த அடுத்த பல திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்தார். ஒரு கட்டத்தில் ரஜினியை பார்த்து சினிமாவுக்கு வந்த இவர் அவருக்கே போட்டியாகவும் மாறினார். அது மட்டுமல்லாமல் விஜயகாந்த் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது காமெடி நடிகரான குள்ளமணி பிஸியான நடிகராக பல படங்களில் நடித்து வந்த நிலையில் இவருக்கு உதவ நினைத்தார்.
அதனால் விஜயகாந்தின் புகைப்படங்களை பல நிறுவனங்களில் காட்டி இவர் எனக்குத் தெரிந்தவர் எந்த வருடம் கொடுத்தாலும் நடிப்பார் வாய்ப்பு கொடுங்கள் என்று விஜயகாந்திற்காக வாய்ப்பு கேட்டுள்ளார். அதன் பிறகு விஜயகாந்த் ஹீரோ ஆன பிறகு அவரின் பல படங்களிலும் குள்ளமணிக்கு விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்து வாழ வைத்தார்.