சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.

அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அப்போது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆலியா மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

அதாவது இவர் விஜய் டிவியிலும் சஞ்சு சன் டிவியில் சீரியல்களில் நடித்து வந்தனர்.

இதனிடையே மீண்டும் ஆல்யா மானசா கர்ப்பமானதால் சீரியலில் இருந்து சற்று விலகினார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஆலியா மானசா தற்போது சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலுக்கு தற்போது தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் திருமண கோலத்தில் நடிகை ஆலியா மானசா போட்டோ சூட் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து அதனை வைரல் ஆக்கி வருகிறார்கள்.