CINEMA
ஈரோடு மகேஷின் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. காதலர் தின ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ….!!!!

அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மேடை காமெடியனாக அறிமுகமானவர்தான் ஈரோடு மகேஷ்.
இவர் தற்போது இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகச்சிறந்த மோட்டிவேஷன் பேச்சாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் ஆசிரியர் பிளஸ் பேச்சாளர். அதுமட்டுமல்லாமல் தமிழில் பட்டப்படிப்பை தொடர்கிறார்.
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தொடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவரின் முதல் அறிமுகம் சன் டிவி என்றாலும் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது விஜய் டிவி மூலம் தான்.
இவரின் நெருங்கிய நண்பர் தாடி பாலாஜி. ஈரோடு மகேஷ் அம்மாவுக்கு காது கேட்காது.
இவர் பிறந்ததிலிருந்தே குரலை அவரின் தாய் கேட்டதில்லை.
ஈரோடு மகேஷ் சன் மியூசிக் அங்கராக வேலை செய்த ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தனது வாழ்க்கையில் முழு வெற்றிக்கும் தாய், மனைவி மற்றும் மகள்தான் என்று காரணம் என ஈரோடு மகேஷ் பல மேடைகளிலும் கூறியுள்ளார் .
இவர்கள் மூவருமே அவரின் வெற்றி பயணத்திற்கு முக்கிய காரணம். ஈரோடு மகேஷ் மோட்டிவேஷனல் வீடியோக்கள் எப்போதுமே இணையத்தில் வைரல் ஆகி வரும்.
இந்நிலையில் ஈரோடு மகேஷ் காதலர் தின ஸ்பெஷலாக மனைவியுடன் இணைந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
அந்த போட்டோ ஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனை பார்த்த ரசிகர்கள் சூப்பரான ஜோடி என்று கூறி புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.