80’ஸ் முன்னணி நடிகை அமலா கணவர் மற்றும் மகன்களுடன்… பலரும் பார்த்திடாத அரிய புகைப்படம்… - Cinefeeds
Connect with us

CINEMA

80’ஸ் முன்னணி நடிகை அமலா கணவர் மற்றும் மகன்களுடன்… பலரும் பார்த்திடாத அரிய புகைப்படம்…

Published

on

1980களில் எல்லோருடைய கனவு கன்னியாக இருந்தவர் நடிகை அமலா. இவர் ‘மைதிலி என்னை காதலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தன்னுடைய இயல்பான நடிப்பாலும், அழகான தோற்றத்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இவர் குறுகிய காலகட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். மைதிலி என்னை காதலி ,மெல்ல திறந்தது கதவு, அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை என்ற பல வெற்றி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். திருமணத்தை தொடர்ந்து திரையுலகை விட்டு விலகி குடும்பத்தை மட்டும் கவனித்து கொண்டார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான ‘கணம்’ என்ற சூப்பரான திரைப்படத்தின் மூலம் சினிமாவில்  ரீ என்ட்ரி கொடுத்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவருக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று ‘பரதநாட்டியம்’.பரதநாட்டிய கலையை கற்றுள்ள இவர் அதன்மூலமே படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 1986 முதல் 1992ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.சமீபத்தில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புதிய சீரியலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

நடிகை அமலா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகில் என்ற மகன் உள்ளார். நாகர்ஜுனா அமலாவிற்கு முன் லட்சுமி என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றார். அவர் தான் நாகசைதன்யா. ஆனால் ஒரு சில காரணங்களால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார் நாகார்ஜூனா. தற்பொழுது நடிகை அமலா தனதுமகன்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…