இந்த புகைப்படத்தில் கியூட்டாக இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க… - Cinefeeds
Connect with us

CINEMA

இந்த புகைப்படத்தில் கியூட்டாக இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

Published

on

சின்னத்திரையின் மூலமாகவும், குறும்படங்களின் மூலமாகவும் ,இணையம் மூலமாகவும் இளம் நடிகைகள் எளிதில் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் நுழைகின்றனர். இப்படி சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமாகி ‘காதல் கண் கட்டுதே’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி.

2017 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட சமூக வலைத்தளங்களில் இவருக்கு அதுல்யா ரவி ஆர்மி உருவாகும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். இவர்  போடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகன், ஏமாளி நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.நாடோடிகள் 2 படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்பொழுது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தில் சாந்தனு உடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்பொழுதும் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகை அதுல்யா ரவியின் சிறுவயது புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.