CINEMA
பல கோடிகளுக்கு விலை போன ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் OTT… எத்தனை கோடின்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, மிர்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது.
ஒரே வாரத்தில் உலக அளவில் 375.40 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே வாரத்தில் எந்த அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வசூல் செய்ததில்லை தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படம், வெளியாகி 2 வாரங்களை கடந்த நிலையில், சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக ஜெயிலர் திரைப்படம் 523 கோடியை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்பொழுது ஜெயிலர் வெற்றியை ரஜினிகாந்த் சிம்பிளாக படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வந்தது. இதைத்தொடர்ந்து ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் OTT உரிமத்தை netflix 100 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு satelite உரிமம் 75 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். விரைவில் இத்திரைப்படம் 1000 கோடியை எட்டி சாதனை படைக்கும் எனவும் ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.