LATEST NEWS
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகை…! அவரே வெளியிட்ட புகைப்படம்…! பதறும் ரசிகர்கள்…!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியல் குடும்பப் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் பல ஆயிரக்கணக்கான இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளது ‘எதிர்நீச்சல்’. நாளுக்கு நாள் டிஆர்பியில் முன்னேறிக் கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
கோலங்கள் சீரியலை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு காரணம் இவர் தனது சீரியலை ரசித்து ஆத்மார்த்தமாக எடுப்பதுதான். இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் இந்த சீரியலில் குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு சிறிது இடைவேளை கொடுத்துள்ளனர்.
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் தான் ஹரிபிரியா. இவர் ‘கனா காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். இதைத்தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள், கண்மணி என பல தொடர்களில் நடித்திருக்கிறார். சீரியலில் மட்டுமல்ல இவர் தனது நிஜ வாழ்க்கையில் பல போராட்டங்களையும் சோகங்களையும் கடந்து வந்து மற்ற பெண்களுக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து கொண்டுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் நந்தினி கேரக்டரில் நடித்து வரும் ஹரிபிரியா. இவருக்கு தற்பொழுது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி இருக்கும் புகைப்படத்தை ஹரிப்பிரியா பதிவிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.