ஏன் இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணீங்க?.. முதல்முறையாக திருமண ரகசியத்தை கூறிய கயல் ஆனந்தி..!! – cinefeeds
Connect with us

VIDEOS

ஏன் இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணீங்க?.. முதல்முறையாக திருமண ரகசியத்தை கூறிய கயல் ஆனந்தி..!!

Published

on

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஆனந்தி. அந்தத் திரைப்படத்தில் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதனை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தில் பாவாடை சட்டை அணிந்து ஒரு கிராமத்து பெண்ணாக தனது எதார்த்தமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தினார்.

இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்ததற்கு பிறகு இவர் கயல் ஆனந்தி என்றுதான் அனைவராலும் அழைக்கப்படுகிறார். இதனை தொடர்ந்து வெற்றிமாறனின் விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதேசமயம் ஜிவி பிரகாஷ் உடன் த்ரிஷா இல்லனா நயன்தாரா, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, சண்டிவீரன் மற்றும் மன்னார் வகையறா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Advertisement

இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இப்படி திரையுலகில் பிஸியான நடிகையாக வளம் வந்த இவர் திடீரென தன்னுடைய காதலருடன் திருமண தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இவர் துணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ஆனந்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஏன் இவ்வளவு சீக்கிரமாக கல்யாணம் பண்ணிங்க என்று கேட்கப்பட்ட நிலையில் அதற்கு குடும்பத்தின் கட்டாயத்தால் திருமணம் செய்து கொண்டதாக பதிலளித்தார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Galatta Media இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@galattadotcom)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in