VIDEOS
தரையில் படுத்து, வேப்பங்குச்சியில் பல்லு விலக்கி, பாட்டி கடையில் இட்லி சாப்பிட்ட ரஜினி… படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. திரைப்படத்தில் போலீஸ் மகன், குறும்புக்கார பேரன் மற்றும் ஓய்வு காலம் என கடைசி கால வாழ்க்கையை வஞ்சையோடு வாழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினி.
இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் அனைவரும் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் சேயார்பாலு சமீபத்தில் அடித்த பேட்டி ஒன்றில் ரஜினி பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதாவது ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் படப்பிடிப்பு நடந்த போது எந்தவித வசதியும் இல்லாத அந்த கிராமத்தில் நடிகர் ரஜினி இரவில் உறங்கும் போது தலையணை கூட இல்லாமல் வெறும் கையை தலைக்கு வைத்து உறங்கியதாகவும், காலையிலிருந்து வேப்பங்குச்சியில் பல்லு விளக்கி அங்கிருந்த ஒரு சின்ன இட்லி கடையில் பாட்டி இடம் இட்லி வாங்கி சாப்பிட்டு இதுபோன்ற சாப்பிட்டு நிறைய நாள் ஆனது என கூறியதாக சேயார் பாலு சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க