CINEMA
திருப்பதியில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்…. வெளியான புகைப்படங்கள்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் நடிகையர் திலகம்.
இந்த திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போதைய கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தசரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இஇதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சினிமாவில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் அந்த திரைப்படத்தில் இவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆக நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக பல கோவில்களுக்கு கீர்த்தி சுரேஷ் சென்று வரும் நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி இவ்வாறு சமீபத்தில் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.